அபத்தம்

அபத்தம்

கொரோணாத் தாக்கம் உலகை உலுக்குது
புரவிப் புயலும் புரட்டிப் போடுது
வெந்த புண்ணில் வேலைப் பாச்சுது
தடுப்பு மருந்தும் தொகையாய் வருகுது 
பலனும் பயனும் யாரும் அறியார்
பக்க விளைவின் பகிரங்கம் பகிரார்
எடுத்தால் என்ன இலாபம் தெரியார்
விடுத்தால் என்ன நட்டம் தெளியார்
டபிள்யூ எச் ஓ என்ன சொல்லும்
யாரும் புரியா சூட்சும ஓட்டம்
வாழ்வில் அபத்தமாய்
நகருது இப்போ

ஜமுனாமலர் இந்திரகுமார் சுவிற்சர்லாந்து

Comments

Popular posts from this blog

Jamuna